Saturday, July 30, 2011
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி - 29-07-2011
அல்லாஹ்வின் பேரருளால், பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் நடைபெறும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் மாநில பேச்சாளரான, சகோ. முஹம்மது ஒலி அவர்கள்,"ரமளானை வரவேற்கிறோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதில் அவர்கள், அல்லாஹ் தன் திருமறையின் 2ஆவது அத்தியாயமான அல் பகராவின் 183ஆவது வசனமான,
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்களுக்கும் குறிப்பிட்ட நாள்களில் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது.
மற்றும் 185ஆவது வசனமான,
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.என்ற வசனத்தை மேற்கொள்காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார். இதில்,
நோன்பின் நோக்கம்,
நோன்பின் சிறப்பு
காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
நோன்பு நோற்க கடமைப்பட்டவர்கள்நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்
சலுகை அளிக்கப்பட்டவர்கள்
நோன்பின் நேரம்
ஸஹர் உணவு
ஸஹருக்காக அறிவிப்பு செய்தல்
மறதியாக உண்பதும், பருகுவதும்
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
குளிப்பு கடைமையானவர் நோன்பு நோற்பது
இரத்தம் குத்தி எடுத்தல்
நோன்பு துறத்தல்ஆகியவற்றிற்கு விளக்கமளித்து, உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து, நோன்பு சம்பந்தமான கேள்வி பதில் நடைபெற்று, நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
இதில் நமது தவ்ஹீத் தவ்ஹீத் சகோதர சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment