Friday, March 16, 2012
உம்ரா வகுப்பு
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாவா மற்றும் சமுதாய பணிகளில் சிறந்து விளங்குவதை அனைவரும் அறிந்ததே. அதே போல் அதன் கிளைகளாக செயல்பட்டு வரும் மண்டலங்களில் ஒன்றான பஹ்ரைன் மண்டலத்திலும் தாவா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, பஹ்ரைன் மண்டலத்தில் நமது தமிழ் பேசும் மக்கள் சிலர் அல்லாஹ் கூறியுள்ள உம்ரா என்ற வழிபாட்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த சகோதரர்களில் ஒருவர், நாம் வருடா வருடம் ஏற்பாடு செய்து சிறப்பாக நடந்த உம்ரா நிகழ்ச்சிகளில் கல்ந்து கொண்டிருக்கிறார். அவர் நம்மை அணுகி, "சில தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் என்னோடு சேர்ந்து உம்ரா செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு வகுப்பு நடத்த முடியுமா?" என்று நம்மை அணுகினார்கள்.
அதற்கு நாம மறுக்காமல், தாரளாமாக செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டு இன்று (16-03-2012) அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள். மேலும் அவர்களது உம்ரா சம்பந்தமாக அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அடித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனுடன் மார்க்க சம்பந்தப்பட்ட சகோதரர் அல்தாஃபி ஆற்றிய உரை அடங்கிய ஏகத்துவ CD யும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
இதில் கலந்து அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்து என்று கூறி விடை பெற்றனர்.
பஹ்ரைனில் அதிகமான தமிழ் பேசக்கூடிய ஜமாஅத்கள் இருந்தும் இவர்கள் நம்மை மட்டும் அணுகியது ஏகத்துவத்திற்க்கு தேம்புட்டும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment